தொழிலாளி போக்சோவில் கைது

தொழிலாளி போக்சோவில் கைது
X
ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கொங்கர்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் - 2  முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளாார். திடீரென்று சிறுமி வயிறு வலிப்பதாக தாயிடம் கூறியதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து சிறுமியுடன் கேட்டுள்ளனர். அப்போது  அதை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான தனபால் (21) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தனபாலன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story