முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
X
மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்எல்ஏ உட்பட பாஜக வினர் 200 பேர் கைது
மொடக்குறிச்சி  எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி உட்பட 200 பாஜகவினர் இன்று ஈரோடு மாநகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.போராட்டத்திற்கு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் தலைமை வகித்தார். இது குறித்து பாஜக எம்எல்ஏ கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் கடுமையாக வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சொத்து பத்திரங்களை ஒப்படைப்போம் என்று அறிவித்தோம். அதை தவிர 60 கவுன்சிலர்களும் ஒருமித்தமாக தீர்மானம் நிறைவேற்றி வீட்டு வரி சொத்து வரியைகுறைக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அருகில் உள்ள கோவை மற்றும் திருச்சி மாநகரத்தில் விட இங்கு பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் ஆறு சதவீதம் வரி உயர்வு செய்யப்படுகிறது. வரி நோட்டீஸ்கள் தரப்படுகின்றன. கட்டவில்லை என்றால் உடனடியாக மின்சாரத்தை குடிநீரை துண்டித்து விடுகின்றனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது வரி குறைவு என்கிறார். கடந்த பத்தாண்டுகளாக வரி உயர்வு செய்யவில்லை. அதனால் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்கிறார். எங்களைப் பொருத்தவரை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது ஏன் இங்கு அதிக வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதை தான் குறைக்க கேட்கிறோம். மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஈரோடு மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை நிறைவேற்றுவதில் கூட பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அதையும் சரி செய்ய முன்வரவில்லை. மீண்டும் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
Next Story