தூய்மை பணி மேற்கொள்ளும் வாகனங்களை தொடக்கி வைத்த அமைச்சர்

மதுரை அருகே தூய்மைப் பணி மேற்கொள்ளும் வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் தொடக்கி வைத்தார்
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு கோயில்பாப்பாக்குடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இருந்து தூய்மை பாரத இயக்கம் ஊரகம் (பகுதி-2), திட்டக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 36 தூய்மை பணி மேற்கொள்ளும் வாகனங்களை இன்று (ஜூன்.27) வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார் . உடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஊராட்சி துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story