திருவேங்கடத்தில் புதிய வட்டாட்சியர் கட்டிடம் இன்று திறப்பு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் 2 கோடி 36லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை திமுக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார், இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார்,தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைகுமார், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், குருவிகளும் வடக்கு ஒன்றிய செயலாளர் சேர்ம துரை, திருவேங்கடம் நகர செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

