கோவை: போதை விழிப்புணர்வு ஊர்வலம் !

சிங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை மாநகர காவல் E1 சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் ஆத்மா அறக்கட்டளை இணைந்து, சிங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை ஜெய் ஸ்ரீ, ஆய்வாளர் இளங்கோ, உதவி ஆய்வாளர் செல்வம், அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story