அதிக வட்டி பெற்றதுடன் பெண்ணுக்கு கொலை மிரட்டல்:அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் கைது

அதிக வட்டி பெற்றதுடன் பெண்ணுக்கு கொலை மிரட்டல்:அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் கைது
X
அதிக வட்டி பெற்றதுடன் பெண்ணுக்கு கொலை மிரட்டல்:அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.
அரியலூர்,ஜூன் 28- அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே அதிக வட்டி பெற்றதுடன் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். திருமானூர் அருகேயுள்ள கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி தனலட்சுமி(50). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரத்திடம், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 50 சென்ட் நிலத்தின் பத்திரத்தை கொடுத்து ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து, வட்டி செலுத்திய நிலையில், மீதமுள்ள வட்டி மற்றும் கடன் தொகையை மே 24 ஆம் தேதி கொடுத்துவிட்டு பத்திரத்தை கேட்கும்போது கொடுக்க மறுத்துள்ளார்.மேலும், தனலட்சுமியை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனலட்சுமி திருமானூர் போலீஸ் நிலையத்தில்  கொடுத்த புகாரின் பேரில், அதிக வட்டி பெற்றது, கொலை மிரட்டல் விடுத்தது என வழக்கு பதிவு செய்த போலீசார் தங்க.சண்முகசுந்தரத்தை  கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story