தென்னிலை அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.இருவர் படுகாயம்.
தென்னிலை அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.இருவர் படுகாயம். கரூரை அடுத்த நெரூர் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுரளி வயது 37. இதேபோல கரூர் சின்னான்டாங் கோவில் எம் ஜி ஆர் நகரை சேர்ந்தவர் மணிவேல் வயது 36. இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஜூன் 25ஆம் தேதி இரவு 7:30- மணி அளவில் , கோவை - கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். பாலமுரளி டூ வீலரை ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் தென்னிலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வந்தபோது , அதே சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று பாலமுரளி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் பாலமுரளி மற்றும் மணிவேல் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக இருவரையும் மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக பாலமுரளி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது ? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர்.
Next Story




