சாத்தூரில் விபத்து இழப்பு வீடு வழங்காத அரசு டவுன் பஸ் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

சாத்தூரில் விபத்து இழப்பு வீடு வழங்காத அரசு டவுன் பஸ் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
X
சாத்தூரில் விபத்து இழப்பு வீடு வழங்காத அரசு டவுன் பஸ் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
சாத்தூரில் விபத்து இழப்பு வீடு வழங்காத அரசு டவுன் பஸ் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்தால் நாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அந்த பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2012 ஆண்டு பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சைக்கிளில் திரும்பிய போது சிவகாசி சாத்தூர் சாலையில் அரசு நகர பேருந்து எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் அரசு பேருந்து மோதியதில் பலியான காளிமுத்து மனைவி மற்றும் குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு கொடுத்தனர் இந்த நிலையில் இந்த வழக்கு சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு அரசு பேருந்து மோதிய விபத்தில் பலியான காளிமுத்துவின் குடும்பத்திற்கு 11 லட்சம் மற்றும் அதற்கும் 7.5% வட்டியுடன் சேர்த்து 14 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு சாத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த காலத்திற்குள் இழப்பீடு தொகையை வழங்காததால் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்து மகாராஜன் அரசு பேருந்தை ஜப்தி செய்ய ஜீன் 5ம் தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில் சாத்தூர் பேருந்து நிலையத்தில் சிவகாசி செல்லும் பயணிகளை ஏற்றி கொண்டிருக்கும் போது சாத்தூர் சார்பு நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் சிவகாசி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் அடுத்த 15 நாட்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதி அளித்ததை எடுத்து ஜப்தி செய்த அரசு பேருந்தை நீதிபதி விடுவித்தார். மேலும் 15 நாட்களுக்குள் உரிய நபர்களுக்கு இழப்பீடு தொகை வழங்காத பட்சத்தில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். மேலும் மேலும் கடந்த இரண்டு நாட்களாக 2 அரசு பேருந்துகள் சாத்தூர் பகுதியில் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story