குவாரிகளை கண்காணிக்க தனியார் அமைப்புகள் எதுவும் அரசால் நியமிக்கவில்லை, பொதுமக்கள் குவாரி உரிமையாளர்கள் நம்ப வேண்டாம்! மாவட்ட, கல்குவாரி, கிரசர், லாரி உரிமையாளர்கள்

X
பெரம்பலூர் மாவட்ட, கல்குவாரி, கிரசர், லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம், அரியலூர் சாலையில் உள்ள அச்சங்கத்தில் தலைவர் நந்தக்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் சத்தியராஜ், கவுரவத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். திருச்சியில் இருந்து வந்த செக்யூரிட்டி போர்ஸ் 2 பேர் குவாரிகளை கண்காணிக்க வந்துள்ளதாகவும், அதற்காக சென்னையில் உள்ள தனியார் இன்ப்ரா டெக், மற்றும் ப்ராப்ரைட்ஸ் நிறுவனத்திற்காக வந்துள்ளதாக பாடாலூர் பகுதியில் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள், அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக தனியார் அமைப்புகள் எல்லை தாண்டி வேலை நடக்கும்ஆபத்தான குவாரிக்குள் அத்துமீறி நுழைவது மட்டுமில்லாமல், கண்காணிக்க வந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டால், அப்படி ஏதும் அரசு தரப்பில் நியமனம் செய்யப்படவில்லை என்றும், அப்படி மீறி வருபவர்கள் மீது, சங்கத்திற்கோ, காவல் துறையிலோ, புவியில்மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளிடம் பிடித்து ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களுக்கும், கல்குவாரி, கிரசர், லாரி உரிமையாளர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம், என தெரிவித்தனர். பொருளாளர் ரவி உள்பட எசனை, வெங்கலம், தொண்டைமான்துறை, எளம்பலூர், செங்குணம், கவுள்பாளையம், கல்பாடி எறையூர், பாடாலூர், அருமடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தபகுதிகளை சேர்ந்த குவாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

