காவிரியில் வெள்ளம். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொது மக்களுக்கு எச்சரிக்கை.

காவிரியில் வெள்ளம். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொது மக்களுக்கு எச்சரிக்கை.
காவிரியில் வெள்ளம். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொது மக்களுக்கு எச்சரிக்கை. தமிழகத்தின் பிரதான நீர் ஆதாரமான மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று மதியம் 12 மணி அளவில் 117.390 அடியை எட்டியது.அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் விரைவில் எட்டும் எனவும் எனவே அதிகப்படியான உபரி நீரை ஐம்பதாயிரம் முதல் 75 ஆயிரம் கன அடி வரை எந்நேரமும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் மேலும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட கூடும் எனவும் மேட்டூர் அணையின் செயற்பொறியாளர்காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிப்பு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வும்.உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பு மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்த கருத்துக்களை பொதுமக்கள் புரிந்து கொண்டு காவிரி கரையோரம் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story