வங்கி ஊழியர் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
திருவள்ளூர் அருகே இந்தியன் வங்கி ஊழியரின் சக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் மூன்று பேர் கொண்ட திருட்டு கும்பலை போலீசார் தேடி வருகின்றனர் திருவள்ளூர் மாவட்டம் மெதூர் இந்தியன் வங்கியில் பணிபுரியும் வங்கி ஊழியர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பணிக்கு வந்த போது வங்கியின் முன்பாக தனது இருசக்கர வாகனத்தினை நிறுத்தி உள்ளார் அதனை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று இருசக்கர வாகனத்தை ஒருவர் லாவகமாக தள்ளி செல்வது போன்று அதனை திருடி கொண்டு மூன்று பேரும் தப்பி செல்கின்றனர் பணி முடிந்து வந்த கார்த்திக் தனது வாகனம் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறை அவசர எண் 100ல் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார் மேலும் பொன்னேரி காவல் நிலையத்தில் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை பகுதியில் வாகனத்தை விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது இருசக்கர வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்த பொன்னேரி காவல்துறையினர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்களையும் தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவு பண்ணி கொண்டு தேடி வருகின்றனர். வங்கி ஊழியரின் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
Next Story






