கல்குவாரியில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள சட்டத்திற்கு புறம்பாக யாரேனும் தொடர்பு கொண்டாலோ அல்லது குவாரிக்கு வருகை தந்தாலோ மாவட்ட கனிமவளத்துறைக்கு புகார் அளிக்கலாம்

X
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள சட்டத்திற்கு புறம்பாக யாரேனும் தொடர்பு கொண்டாலோ அல்லது குவாரிக்கு வருகை தந்தாலோ மாவட்ட கனிமவளத்துறைக்கு புகார் அளிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் த.பெர்னாட் அவர்கள் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்குவாரிகளில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள தாங்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பொய்யான தகவலைக் கூறிக்கொண்டு சில மர்ம நபர்கள் சட்டவிரோதமாக குவாரி உரிமையாளர்களை அணுகுவதாக தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்; அரசால் அவ்வாறு எந்தவிதமான ஏற்பாடும் செய்யப்படவில்லை. இவ்வாறு கூறிக்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக தங்களை யாரேனும் தொடர்பு கொண்டாலோ அல்லது குவாரிக்கு வருகை தந்தாலோ உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிப்பதுடன், தங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் மேற்படி நபர்கள் மீது புகார் அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பாக மாவட்ட கனிம வளத்துறைக்கு புகார் அளிக்க விரும்புவர்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் மண்டல திருச்சிராப்பள்ளி இணை இயக்குநர், தொலைபேசி எண் 94438 70645 லும், பெரம்பலூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநர் அவர்களின் தொலைபேசி எண் 91590 59636லும், பெரம்பலூர் உதவி புவியியலாளர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அவர்களின் தொலைபேசி எண் 63817 18415லும் தொடர்பு கொள்ளலாம் என புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் திரு.த.பெர்னாட் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story

