மணவாடி டூவீலர்- டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து.இளைஞர்கள் படுகாயம்.

மணவாடி டூவீலர்- டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து.இளைஞர்கள் படுகாயம்.
மணவாடி டூவீலர்- டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து.இளைஞர்கள் படுகாயம். கரூரை அடுத்த கத்தாழைப்பட்டி அருகே உள்ள முத்தாலம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு வயது 27. இவரது நண்பர் நரேஷ் வயது 25. இருவரும் ஜூன் 26 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் , கரூர் - பாளையம் சாலையில் டூவீலரில் சென்றனர். மணவாடி பெட்ரோல் பங்க் எதிரே சென்றபோது , எதிர் திசையில் கரூர் தாந்தோணிமலை பொன். நகரை சேர்ந்த நல்லசாமி வயது 61 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் , சந்துரு ஓட்டிச் சென்று டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளைஞர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து சந்துரு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , டிராக்டரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நல்லுசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story