தளபதி அரிமா  சங்க புதிய  நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தளபதி அரிமா  சங்க புதிய  நிர்வாகிகள் பதவியேற்பு விழா
X
குமாரபாளையத்தில் தளபதி அரிமா  சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
குமாரபாளையத்தில் தளபதி அரிமா  சங்க புதிய  நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் கவர்னர் அரவிந்தராஜ் பங்கேற்று, புதிய  தலைவர் சிவராமன், செயலர்கள் காயத்ரி, நீலகண்டன், பொருளர்  தர்மலிங்கம் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய  உறுப்பினர்களுக்கு முன்னாள் கவர்னர் விஜயகுமார் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  முன்னாள் கவர்னர் சந்திரசேகர் பங்கேற்று,  முன்னாள் நிர்வாகிகள், மற்றும் புதிய நிர்வாகிகளை பாராட்டி பேசினார். முன்னாள் கவர்னர் குமரேசன் பங்கேற்று, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, அன்னை ஆதரவற்றோர் மையத்திற்கு அரிசி ஒரு சிப்பம் வழங்கியதுடன், கண் தானம் வழங்கிய குடும்பத்தாரை கவுரவித்தார். பன்னாட்டு சந்தா மற்றும் மாவட்ட சந்தா அனைத்தும் மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. குமாரபாளையம் அரிமா சங்கம், குமாரபாளையம் டெக்ஸ்  சிட்டி அரிமா சங்கம்,  பவானி குமாரபாளையம் அரிமா  சங்கமம், பள்ளிபாளையம் மத்திய அரிமா சங்கம்,  பள்ளிபாளையம் எஸ்.பி.பி. சேரன் அரிமா சங்கம்  உள்ளிட்ட  அனைவருக்கும்  மாவட்ட பசிப்பிணி தலைவர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
Next Story