பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை
X
சிறை தண்டனை
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு, தஞ்சாவூர் நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனையை வெள்ளிக்கிழமை விதித்தது. கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது 47 வயதுள்ள தந்தை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தார். இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து தந்தையை 2020 ஆம் ஆண்டில் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ.தமிழரசி விசாரித்து தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
Next Story