தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள்

தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள்
X
தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள். தடகள வீராங்கனை சாந்தி சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
தாராபுரம் பகுதியிலுள்ள சாராநர்சிங் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் சாரா நர்சிங் கல்லூரி நிறுவனர் டாக்டர் எம்.ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது. சாரா நர்சிங் கல்லூரி தலைவர் பேராசிரியை கே.மரியம் உல் ஆசியா கொடி ஏற்றி வைத்தார். கல்லூரி இயக்குனர் பொறியாளர் பி.எம்.முகமது சதுருதீன், கல்லூரி துணைத் தலைவரும் திரைப்பட இயக்குனருமான ஹலிதா சமீம், கல்லூரி செயலாளர் பெனாசீர் பேகம், மக்கள் தொடர்பு அலுவலர் எம். சகாபுதீன், கல்லூரி நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற தடகள வீராங்கனை சாந்தி சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளையும் வெற்றி கோப்பைகளையும் வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் வீராங்கனை மாணவி ஹன்சிகா, ஆண் விளையாட்டு வீரர் மாணவர் சஞ்சய் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டு வெற்றி கோப்பைகள் பெற்றனர். முன்னதாக சாரா நர்சிங் கல்லூரி பயிற்சியாளர் குணசீலன் வரவேற்று பேசினார். சாரா நர்சிங் கல்லூரி மாணவி மெர்லின் ஜென்ட் நன்றி கூறினார்.
Next Story