திருச்செந்தூரில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவக்கம்

X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. வருகிற 1-ந் தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் கோயில் முதல் பிரகாரத்தில் உள்ள வல்லபை விநாயகர் சன்னதி முன்பு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. இதில் யாக வேள்வி, பிரம்மச்சாரி வழிபாடு, கஜ பூஜை, பூர்ணாஹுதி தீபாராதனை ஆகியவை நடந்தன. இந்நிகழ்ச்சியில் கோயில் தக்கார், அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், கண்காணிப்பாளர்கள் விஜயலட்சுமி, அஜித் மற்றும் திரிசுதந்திரர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு அஷ்டதிக்கு பாலகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, வேள்வி பூஜை நடந்தது. வரும் ஜூலை 1ஆம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. தொடர்ந்து 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
Next Story

