சங்கரன்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுரண்டை ரோட்டில் உள்ள ஆப்பிள் நகர் அருகில் உள்ள திடலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டம் சார்பாக விஜய் பிறந்தநாள் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம், 1551 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நேற்று இரவு நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், இணைச் செயலாளர் வைர மணி, கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், ஒய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான டாக்டர் அருண்ராஜ், . முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட்செல்வன், செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ், திருநெல்வேலி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ராஜகோபால், திருநெல்வேலி வடக்கு மாவட்ட கழக இணை செயலாளர் மரிய ஜான், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜாகிர் உசேன், தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ், தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ், தென்காசி கிழக்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பேசியதாவது:- தளபதி விஜய் 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம்அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் சூர்யா (எ) அகல்யா நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

