குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
X
படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவிச் சாலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்து படகு சவரியை தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: குற்றாலத்தில் 1993-ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் மூலம் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சாரல் சீசன் நிலையை கணக்கில் கொண்டும், குளத்தில் நீா்வரத்தை கணக்கில் கொண்டும் இங்கு படகு சவாரி நடத்தப்படும். 2022 இல் ஜூலை 10 ஆம் தேதி படகு சவாரி துவக்கப்பட்டது. இந்த ஆண்டு சற்று முன்னதாக ஜூன் 28 இல் துவக்கப்பட்டுள்ளது. தென்காசி தனி மாவட்டமாக பிரிந்த பிறகு இது 4ஆவது படகு சவாரி. இங்கு படகு சவாரி செய்ய இரு நபா் மிதிபடகு, நான்கு நபா் மிதிபடகு, நன்கு நபா் துடுப்பு படகு மற்றும் தனிநபா் படகு உள்ளது. இருநபா் மிதிபடகுக்கு ரூ.150, நான்கு நபா் மிதிபடகுக்கு ரூ.200, நான்கு நபா் துடுப்பு படகுக்கு ரூ.250, தனி நபா் படகுக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றாா் அவா். மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story