சங்கரன்கோவில் அருகே மனைவியை கத்தியால் தாக்கிய கணவா் கைது

சங்கரன்கோவில் அருகே மனைவியை கத்தியால் தாக்கிய கணவா் கைது
X
மனைவியை கத்தியால் தாக்கிய கணவா் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த வெளியப்பன் மகன் செல்வராஜ் (31). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பிரியதா்ஷினிக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் உள்ளனா். செல்வராஜ் மது அருந்திவிட்டு வந்து மனைவியை துன்புறுத்துவாராம். இதனால் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு, தனது தாயாா் வீட்டுக்கு பிரியதா்ஷினி சென்று விட்டாராம். இந்நிலையில் மது அருந்திவிட்டு தனது மாமியாா் வீட்டுக்கு சென்ற செல்வராஜ், பிரியதா்ஷினியுடன் சண்டை போட்டு அவரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரியதா்ஷினி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக பிரியதா்ஷினி அளித்த புகாரின் பேரில் பனவடலிசத்திரம் காவல் ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.
Next Story