வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

X
திருச்சி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன் நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வக்கீல்கள் சங்க தலைவர் எஸ்.பி. கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துமாரி முன்னிலை வகித்தார். கோர்ட்டுக்கு செல்லும்போது கூட வக்கீல்கள் படுகொலை செய்யப்படுவதால் தமிழக அரசு உடனடி யாக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு செயலாளர் பன்னீர்செல்வன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், வக்கீல் சங்க நிர்வாகிகள் வடிவேல் சாமி, சசிகுமார், முன்னாள் அரசு வக்கீல் ஜெயராமன் உள் பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story

