புதிய பஸ் நிலைய பணிகள் துவக்கி வைப்பு

X
கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் கிராம எல்லையில் புதிய புறநகர் பஸ் நிலையம், குடிநீர் அபிவிருத்தி பணிகள் மற்றும் தினசரி நாளங்காடி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர். நகர சேர்மன் சுப்ராயலு வரவேற்றார். பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பங்கேற்று, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.21 கோடி மதிப்பில் புறநகர் பஸ்நிலையம் ரூ.21 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி பணிகள்; ரூ.9.09 கோடி மதிப்பில் தினசரி நாளங்காடி; என மொத்தம், ரூ.46.30 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார்.
Next Story

