லாட்டரி சீட்டு விற்க முயன்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்க முயன்றவர் கைது
X
கொல்லங்கோடு
குமரி மாவட்டம்  கொல்லங்கோடு பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் நின்ற ஒருவர் லாட்டரி விற்பனை செய்ய முயன்று கொண்டிருந்தார்.  போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொல்லங்கோடு அருகே கேரள மாநில பகுதி காக்க விளை என்ற இடத்தை சேர்ந்த சஜிமோன் (45) என்பதும், அவர் லாட்டரி விற்பனை செய்ய வந்தவர் என்று தெரிய வந்தது. அவரை  கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story