திருவெண்ணெய்நல்லூர் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

X
திருவெண்ணெய்நல்லுாரில் தி.மு.க., நான்கு ஆண்டு சாதனை தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.அண்ணா திடலில் நடந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளர் ராயல் அன்பு, பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவ சக்திவேல், பேரூராட்சி துணைச் சேர்மன் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனைகள் குறித்து பேசினார்.
Next Story

