பட்டதாரி இளைஞர் பலி

பட்டதாரி இளைஞர் பலி
X
சத்தியமங்கலம் அருகே பரிதாபம் பாம்பு கடித்து என்ஜினீயரிங் பட்டதாரி பலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்மநாய்க்கன்புதூரைச் சேர்ந்தவர் சுபிக்சன் (23). பொறியியல் பட்டதாரியான இவர், தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 21-ம் தேதி தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நீர் இறைக்கும் குழாயின் வால்வை மாற்றியுள்ளார். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, சுபிக்சனை கடித்துள்ளது. இதுகுறித்து அவர், தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரை மீட்ட உறவினர்கள், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சுபிக்சன் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.இதுகுறித்து அவரது தந்தை பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story