கேரளா லாட்டரி விற்றவர் கைது

கேரளா லாட்டரி விற்றவர் கைது
X
கேரளா லாட்டரி விற்ற ஒருவர் கைது
ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது இம்மானுதீன் (36). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாகவும், பரிசு விழும் என பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றி வருவதாகவும், தானும் பலமுறை ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்த ராசு (24) என்பவர், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில், முகமது இம்மானுதீனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கேரள லாட்டரி, செல்போனை பறிமுதல் செய்தனர்.
Next Story