சேலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாநில கைப்பந்து போட்டி

X
ரான்சன் கைப்பந்து கிளப், சேலம் மாவட்ட கையுந்து பந்து சங்கம், ஏ.டி.எம். குரூப்ஸ் ஆகியவை சார்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி நேற்று சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. முன்னதாக காலை தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட காவல் அலுவலக ஓய்வு பெற்ற அலுவலர் குமார் வரவேற்று பேசினார். செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சேகர் தலைமை தாங்கினார். ரான்சன் கைப்பந்து கிளப் தலைவர் ரான்சன், சர்வதேச பயிற்சியாளர் சாமிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயலட்சுமி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் கடலூர், நெல்லை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 6 பள்ளி அணிகள், 6 கல்லூரி அணிகள் என மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டன. தொடர்ந்து 2-ம் நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) போட்டிகள் நடக்கிறது. பின்னர் மாலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.
Next Story

