மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அறை திறப்பு
X
எஸ்.பி கவுதம் கோயல் திறந்து வைத்தார்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் கண்காணிப்பு கேமரா அறை நிறுவப்பட்டு உள்ளன. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம்கோயல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை அமர வைத்து விசாரணை செய்யவும், பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கேமராவின் வீடியோ பதிவு காட்சிகளை வைத்து குற்ற சம்பவங்களை எளிதில் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், ஜீவிதா மற்றும் போலீசார், முக்கிய பிரமுகர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story