சேலத்தில் எல்.ஐ.சி. கேப் புதிய கிளை அலுவலகம் திறப்பு விழா

சேலத்தில் எல்.ஐ.சி. கேப் புதிய கிளை அலுவலகம் திறப்பு விழா
X
தென்மண்டல மேலாளர் திறந்து வைத்தார்
சேலம் ஜான்சன்பேட்டையில் நவீன மயமாக்கப்பட்ட எல்.ஐ.சி. கேப் கிளையின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் தென்மண்டல மேலாளர் ஜி.வெங்கடரமணன் கலந்து ெகாண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் தென்மண்டல மேலாளர் கே.முரளிதர், முதன்மை பொறியாளர் ஆர்.ஜெயசீலன், சேலம் முதுநிலை கோட்ட மேலாளர் வி.எஸ்.அனந்த குமார், வணிக மேலாளர் டி.அசோக்குமார், விற்பனை மேலாளர் பி.சவுண்டப்பன், கேப் கிளையின் முதுநிலை கிளை மேலாளர் ஜார்ஜ் ஸ்டீவன்சன் மற்றும் அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள், பாலிசிதாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். எல்.ஐ.சி.யின் இந்த கேப் கிளை ஜான்சன்பேட்டையில் உள்ள ஜீவன் பிரகாஷ் கோட்ட அலுவலக வளாகத்தில் செயல்படும். இந்த புதிய கிளையில் பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசி சேவைகளை மேம்பட்ட முறையில் பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story