சேலம் ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தில்

X
சேலம் ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தில் ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, தாய்மார்கள் பாலுட்டும் அறை ஆகிய இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்க வேண்டும் என தூய்மை பணியாளர்களை அறிவுறுத்தினார். மேலும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டினை ஆணையாளர் ஆய்வு செய்தார். இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கான வசதிகள், வணிக உபயோகங்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து ஈரடுக்கு பஸ் நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிபுறங்களில் மின் விளக்குகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா?, அடுக்குமாடி பஸ் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் உள்ளதா? என்று ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் வேடியப்பன், மாநகர நல அலுவலர் முரளிசங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story

