கரூரில் புலவர் அருணா பொன்னுசாமி எழுதிய மூவேந்தர் காப்பியம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கரூரில் புலவர் அருணா பொன்னுசாமி எழுதிய மூவேந்தர் காப்பியம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கரூரில் புலவர் அருணா பொன்னுசாமி எழுதிய மூவேந்தர் காப்பியம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் புலவர் அருணா பொன்னுசாமி எழுதிய மூவேந்தர் காப்பியம் நூல் வெளியீட்டு விழா மற்றும் மயிலம் பொம்மபுர ஆதீனம் 19 ஆம் பட்டம் குருமகா சன்னிதானம் சிவஞான பாலய சுவாமிகள் நூற்றாண்டு விழா முனைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் அமுது அறக்கட்டளை நிறுவனர் நஞ்சப்பன் , சிவஞான பாலயசுவாமிகள், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருவள்ளுவன்,நூல் ஆசிரியர் அருணா பொன்னுசாமி,திருக்குறள் பேரவை செயலாளர் மேலைப் பழனியப்பன்,எழுச்சி கவிஞர் செல்வம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் புலவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 500 பக்கங்கள் கொண்ட மூவேந்தர் காப்பியம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது, நூல் வெளியீட்டு விழாவிற்கு பிறகு புத்தகம் ஒன்றுக்கு ரூபாய் 500 கொடுத்து அனைவரும் ஆர்வத்துடன் புத்தகத்தை வாங்கிச் சென்றனர்.
Next Story