நாமக்கல் மாவட்ட பாமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் ...

நாமக்கல் மாவட்ட பாமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் ...
X
நாமக்கல் மாவட்ட பாமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் ...
நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் சேலம் ரோடு புதிய நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள சுஜிதா கோல்டன் ஹாலில் கிழக்கு மாவட்ட செயலாளர் அரிமா ஆ. மோகன்ராஜ், தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பொன். முருகேசன், வரவேற்புரை ஆற்றினார். மேலும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே. உமா சங்கர், மாவட்டத் தலைவர் எம். முருகேசன், மாவட்டத் தலைவர் கே.பிரதாப், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஜி. திருப்பதி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் எருமப்பட்டி மனோகரன், வன்னியர் சங்க நகர செயலாளர் கா. மாரிமுத்து, நகர தலைவர் பூக்கடை கி. மாது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் அவர்களும், மாநில பொருளாளர் சையத் மன்சூர் உசேன், அவர்களும், கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் பி..எம். கே.பாஸ்கரன், அவர்களும், மாநில, தேர்தல் பணிக்குமு ஸ்டீல். சதாசிவம் அவர்கள், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் எடப்பாடி துரைசாமி அவர்களும் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும், நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் பேசினர். தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாநில, மாவட்ட ,நகர, ஒன்றிய ,பேரூர் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள், என பலர் கலந்து கொண்டனர்.
Next Story