ஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டிகிடக்கும் அரசு நூர்ப்பாலையிலிருந்து இயந்திரங்கள், இரும்புகளை திருடும் கும்பலின் வீடியோ மற்றும் வழிப்பறி செய்யும் வீடியோ வெளியானதால் பொதுமக்கள் அச்சம

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டிகிடக்கும் அரசு நூர்ப்பாலையிலிருந்து இயந்திரங்கள், இரும்புகளை திருடும் கும்பலின் வீடியோ மற்றும் வழிப்பறி செய்யும் வீடியோ வெளியானதால் பொதுமக்கள் அச்சம்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு நூற்பாலை. இந்த நூற்பாலை விருதுநகர் மாவட்டம் வருவதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது காமராஜர் அட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு சிறப்பாக இயங்கி வந்தது பின்னர் கடந்த 22 ஆண்டுக்கு முன்பு கடன் பிரச்சனையால் இந்த நூற்பாலை மூடப்பட்டது. இந்த ஆலையில் இயங்கி வந்த இயந்திரங்கள் மற்றும் காப்பர் கம்பிகள்,இரும்பு கம்பிகள், இரும்பு பைப்கள் நூர்பாலையில் அங்கேயே வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் பூட்டிக்கிடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு நூர்பாலையில் இருந்து இரும்பு பொருட்களையும் இயந்திரங்களையும் திருடும் N.சண்முகசுந்தரபுரம் பகுதியை சார்ந்த திருட்டு கும்பலின் வீடியோ வெளியாகி உள்ளது மேலும் மனநலம் குன்றியவர்கள் ஆதரவற்றவர்கள், அவ்வழியாக பாதசாரிகளாக செல்பவர்களிடம் குடிபோதை,கஞ்சா போதையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் வழிப்பறி செய்யும் வீடியோவும் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கூட்டுறவு நூற்பாலையிலிருந்து பொருள்கள் திருடு போவதாகவும் இந்த வழியில் அடிக்கடி வழிப்பறி நடப்பதாகவும் காவல்துறையினருக்கு பலமுறை தகவல் கொடுத்தும் காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை எனவும் ரோந்து பணியில் ஈடுபடுவதும் இல்லை எனவும் ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த வீடியோ வெளியானதை வைத்து காவல்துறையினர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து நகர் பகுதி அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது..
Next Story

