உடல் நலம் பாதித்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்

உடல் நலம் பாதித்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்
X
உடல் நலம் பாதித்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்
விருதுநகர் அருகே உடல் நலம் பாதித்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ராயப்பன். மேலும் இவர் தொகுதியின் அதிமுகவின் முன்னாள் கிளைச் செயலாளர். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பாதிப்படைந்து வந்துள்ளார். இந்த நிலையில் அதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர் மாஃபா K.பாண்டியராஜன் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்த அதிமுக முன்னாள் கிளை செயலாளர் மைக்கேல் ராயப்பனை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகரக் கழக துணைச் செயலாளர் பா கண்ணன், உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story