புரட்சிகர தொழிலாளர்கள் கட்சி மற்றும் குலசேகரன் தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

X
Rasipuram King 24x7 |29 Jun 2025 6:18 PM ISTபுரட்சிகர தொழிலாளர்கள் கட்சி மற்றும் குலசேகரன் தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே, புரட்சிகர தொழிலாளர்கள் கட்சி மற்றும் குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொது சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிறுவனத்தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், பிள்ளாநல்லூர் பேரூராட்சி 1வது வார்டு மற்றும் 2வது வார்டில் உப்பு தண்ணீர் பைப் அமைக்க வேண்டும், 85.ஆர்.கொமாரபாளையம் மற்றும் பனங்காடு ஆகிய பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும், திருச்சி மெயின் ரோட்டில் இருந்து பொன்குறிச்சி வரை உள்ள புதிய பைப்பாஸ் ரோட்டில் விபத்து நடப்பதை தவிர்க்க மின் விளக்கு அமைக்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான பொருளான எம்.சாண்டு பயன்படுத்துவதால் கட்டுமான தொழிலாளர்களுக்கு தோல் அலர்ஜி ஏற்படுகிறது. எனவே, எம்சாண்டு தரத்தினை ஆய்வு செய்ய வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு பணி இடத்தில் விபத்தால் எலும்பு முறிவு ஏற்பட்டால் அதற்குரிய உதவித்தொகை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில பொதுச்செயலாளர் வி. சுந்தராம்பாள், மாநில துணைத்தலைவர் சி. குப்புசாமி, நாமக்கல் மாவட்ட அவை தலைவர் வி.கே. செல்வராசு, நாமக்கல் மாவட்ட தலைவர் கே. பெரியசாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். மாதேஸ்வரன், மாநில இளைஞரணி தலைவர் மற்றும் பொருளாளர் வி. பூபதி, மற்றும் நிர்வாகிகள் கதிரேசன்,சங்கர், செல்வம், பூபதி ராஜா, மாது (எ) பெருமாள், முருகேசன், மணிகண்டன், முருகேசன், குமார், குணசேகரன், நல்லசிவம், சரவணன், சிங்கு (எ) மணிகண்டன், சேகர், செந்தில் கோபால், பழனியப்பன் சரவணன், மோகன்குமார், சுரேஷ், மாணிக்கம், முருகேசன், பச்சமுத்து, ஜெகநாதன், மாரிமுத்து, செங்கோடன், சின்னப் பையன், சங்கர், சுரேஷ், ஆசைத்தம்பி, பூபதி, சண்முகம், ராஜ்குமார், மல்லிகா, பாஞ்சாலை, தேவி, சுந்தரம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
Next Story
