நல்லோர் வட்டத்தின் வாராந்திர நேரடி சந்திப்பு
பெரம்பலூர் மாவட்ட நல்லோர் வட்டத்தின் வாராந்திர நேரடி சந்திப்பு அனுக்கூர் கிராமத்தில் நடைபெற்றது. அனுக்கூர் கிராமத்தில் ஏரி குளங்களை தூர் வாரி கிட்டதட்ட 3000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து சிறப்பாக பசுஞ்சோலையாக மாற்றி வரும் பசுமைப்பயணம் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது ஊரின் பழமையான சிவாலத்தையும் புதுப்பித்து ஆன்மீகப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். வருடந்தோறும் இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து கிராம முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டு வருகின்றனர். அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியினை பசுமைப்பயணம் இளையராஜா மிகவும் திறம்பட செய்து வருகின்றார். வங்கி வசதி இல்லாதது தான் எங்களது கிராமத்திள் அத்தியாவசிய தேவையாக உள்ளது.வங்கிக்கு செல்ல வேண்டுமானால் வாலிகண்டபுரம் அல்லது வேப்பந்தட்டை தான் செல்லவேண்டும். அங்கு சென்று வருவது எங்களுக்கு பாதுகாப்பாக இல்லை எனவும் கூறினர். அவசர ஆபத்து காலங்களில் உதவுவதற்காக முதலுதவி குழுக்கள் அமைத்து, அவர்களுக்கு பயிற்சியளித்து மக்களை காக்கும் பணியை செய்திடவும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த சத்தான உணவுகளை உண்பது குறித்தும், நஞ்சில்லா உணவுகளை வீட்டில் விளைவித்து காய்கறி தோட்டம் அமைத்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது குறித்தும் மருத்துவர்.புவனேஸ்வரி தேவராஜன் ஆலோசனை வழங்கினார். நல்லோர் வட்டம் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் நா.ஜெயராமன் அவர்கள் விளக்கிக் கூறினார். இன்றைய கூட்டம் சிறப்பாக நடைபெற காரணமான அனுக்கூர் இளையராஜா, பசுமைப்பயணம் ராஜா, அனுக்கூர் கிராம பணி தள பொறுப்பாளர் சாந்தி மற்றும் குடிகாடு கிராம பணி தள பொறுப்பாளர் சாந்தி அவர்களுக்கு நல்லோர் வட்டம் குறித்த 100 துறைகளுக்கான என் பொறுப்பு அட்டையும், பேராசிரியர்.பழனிதுரை அவர்கள் எழுதிய குடிமக்கள் தயாரிப்பு புத்தகங்களையும் இயற்கை ஆர்வலரும் பொறியாளருமாகிய குவாலிட்டி மகாதேவன் அவர்களும், ஜமீன்பேரையூர் பள்ளி தமிழாசிரியர் சுமன்.சக்திவேல் அவர்களும்வழங்கி கௌரவித்தனர். இன்றைய வாரக் கூடுதலில் கலந்து கொண்டு சிறப்பித்த கிராம பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் பெரம்பலூர் மாவட்ட நல்லோர் வட்ட பொறுப்பாளர் க.மகேஸ்குமரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




