குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் பங்கு மாறுதல் முகாம்

X
தஞ்சாவூர் அருகே குருங்குளத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் பங்குதாரர்களின் பங்கு மாறுதல் முகாம்கள் ஆலை தலைமை நிர்வாகி தலைமையில் நடக்க உள்ளது. இது குறித்து சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் அருகே குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. இந்த சர்க்கரை ஆலையின் பங்குதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் அடிப்படையில், பங்கு மாறுதல் மற்றும் முகவரி மாறுதல் சம்பந்தமாக சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி தலைமையில் பங்கு மாறுதல் முகாம்கள் நடக்க உள்ளது. அதன்படி, ஒரத்தநாடு கோட்ட அலுவலகத்தில் வரும் 2ஆம் தேதி காலை 10 மணிக்கும்,, மருங்குளம் கோட்ட அலுவலகத்தில் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கும், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கூட்ட அரங்கத்தில் வரும் 4 ஆம் தேதி காலை 10 மணிக்கும், தஞ்சாவூர் கோட்ட அலுவலகத்தில் வரும் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கும், கந்தர்வகோட்டை கோட்ட அலுவலகத்தில் வரும் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கும், திருவையாறு கோட்ட அலுவலகத்தில் வரும் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கும் முகாம்கள் நடக்கிறது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு ஒரத்தநாடு கரும்பு அலுவலர் புண்ணியமூர்த்தியை 9025775390 என்ற எண்ணிலும், மருங்குளம் கரும்பு அலுவலர் ஜெயராமன் 9025775356, சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர்கள் மற்றும் கந்தர்வகோட்டை கோட்டத்திற்கு துரைராஜ் 9025775355, காசிராஜா 8754045710, தஞ்சாவூர் மற்றும் திருவையாறு பங்குதாரர்கள் கரும்பு அலுவலர் ஜெயராமன் 9025775356 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். பங்குதாரர்கள் தங்களின் பங்கு மாறுதல் மற்றும் முகவரி மாறுதல் சம்பந்தமாக கீழ்காணும் ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பங்குதாரர் இறந்திருப்பின் இறப்புச் சான்றிதழ், பங்குதாரர் உயிருடன் இருப்பின் சம்மதக் கடிதம், வாரிசு சான்றிதழ், இதர வாரிசுதாரர்கள் சம்மதக் கடிதம், பங்கு சான்று தொலைந்து இருப்பின் வழக்கறிஞரிடம் பிரமாணப் பத்திரம் பெற்று வர வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மேற்கண்ட நாட்களில் சம்பந்தப்பட்ட முகாமில் கலந்து கொண்டு தெரிவித்துப் பயன்பெறலாம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

