அரிசி வாங்க வந்தவரிடம் அரிசி இல்லை என அனுப்பிவிட்ட சிறிது நேரத்தில் அரிசி வழங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததால் பயனாளர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ

அரிசி வாங்க வந்தவரிடம் அரிசி இல்லை என அனுப்பிவிட்ட சிறிது நேரத்தில் அரிசி வழங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததால் பயனாளர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ
X
அரிசி வாங்க வந்தவரிடம் அரிசி இல்லை என அனுப்பிவிட்ட சிறிது நேரத்தில் அரிசி வழங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததால் பயனாளர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியான நிலையில் மோசடியில் ஈடுபட்ட விற்பனையாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரேஷன் கடையில் அரிசி வாங்க வந்தவரிடம் அரிசி இல்லை என அனுப்பிவிட்ட சிறிது நேரத்தில் அரிசி வழங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததால் பயனாளர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியான நிலையில் மோசடியில் ஈடுபட்ட விற்பனையாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை... சிவகாசி அருகே வடமலாபுரம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 24ம் தேதி அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது விற்பனையாளர் சுபாஷ் அரிசி இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அரிசி முட்டை முட்டையாக இருந்ததை கண்டு அரிசியை வைத்துக் கொண்டே ஏன் இல்லை கூறிகிறீர்கள் என அப்பெண் கேள்வி எழுப்ப நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் அளித்து அரிசி இல்லை என அவரை கடையிலிருந்து அனுப்பி வைத்துள்ளார். அவர் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது ரேஷன் அட்டை கணக்கில் 16 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளதாக ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அரிசி இல்லை என கூறிவிட்டு தற்போது அரிசி வழங்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் எப்படி அனுப்பப்பட்டது எனவும் அரிசி வழங்கப்பட்டதாக கூறி கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறீர்களா என விற்பனையாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் விற்பனையாளர் சுபாஷ் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினர். இதையடுத்து இன்று விற்பனையாளர் சுபாஷை சிவகாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்க செயலாளர் நாகராஜன் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
Next Story