பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்
X
ஏலம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த விற்பனைக் கூடத்தில்  விற்பனைக் குழுச் செயலா் சரசு தலைமையிலும் விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் பிரியமாலினி சித்தாா்த்தன் , கும்பகோணம் வேளாண் அலுவலா் தாரா உள்ளிட்டோா்  முன்னிலையிலும் ஏலம் நடைபெற்றது. அப்போது 400 விவசாயிகள் தங்களது பருத்தியை  விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனா். வியாபாரிகள் பருத்தியின் தரத்தை சோதித்து விலை நிா்ணயம் செய்தனா். இதில் அதிகபட்சமாக  பருத்தியானது கிலோவுக்கு ரூ. 75.89, குறைந்தபட்சமாக கிலோவுக்கு ரூ. 62, சராசரியாக கிலோவுக்கு ரூ. 68.30, என்ற விலை நிா்ணய அடிப்படையில்  ஏலம் போனது.
Next Story