தேவகவுண்டனூரில் டூவீலரில் செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால் விபத்து.ஒருவர் படுகாயம்.
தேவகவுண்டனூரில் டூவீலரில் செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால் விபத்து.ஒருவர் படுகாயம். திண்டுக்கல் மாவட்டம் , குஜிலியம்பாறை , பாளையம் ,ஜீவா நகரை சேர்ந்தவர் அன்பழகன் வயது 51. ஜூன் 27ஆம் தேதி காலை 9 மணி அளவில் , பாளையம் - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவகவுண்டனூர் அருகே வந்தபோது , திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அன்பழகனுக்கு தலை கை கால்கள் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால, அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த அன்பழகனின் உறவினர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story




