போதையில் விழுந்து முதியவர் பலி

X
Komarapalayam King 24x7 |29 Jun 2025 8:16 PM ISTகுமாரபாளையத்தில் போதையில் விழுந்து முதியவர் பலியானார்.
குமாரபாளையம் சுந்தரம் காலனியில் வசிப்பவர் சுப்ரமணி, 63. விசைத்தறி கூலி. இவருக்கு மது குடிக்கும் பழக்க இருந்தது. நேற்றுமுன்தினம் அதிகமாக மது குடித்ததில், வீட்டில் மாடிப்படியில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். இவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
