வெள்ளலூர் குப்பை கிடங்கை ஆய்வு செய்ய உத்தரவு – தேசிய பசுமை தீர்ப்பாயம்

வெள்ளலூர் குப்பை கிடங்கை ஆய்வு செய்ய உத்தரவு – தேசிய பசுமை தீர்ப்பாயம்
X
கோவை மாநகராட்சியின் வெள்ளலூர் பகுதியில் உள்ள 650 ஏக்கர் குப்பை கிடங்கை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் வெள்ளலூர் பகுதியில் உள்ள 650 ஏக்கர் குப்பை கிடங்கை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதால் காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. பொதுமக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாசு தடுப்பு குழுவினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் விசாரணை நடத்த, மாநகராட்சி தரப்பில் பொறியாளர் இளங்கோவன், உதவி பொறியாளர் ஜீவராஜ் மற்றும் மனுதாரர் மோகன் ஆஜராகினர். தீர்ப்பாயம், ஒன்பது லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், கூடுதல் முதன்மை செயலாளர் தலைமையில் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Next Story