கோவை: கல்வி ஆய்வுக் கூட்டத்தில் பரபரப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

X
கோவை ப்ரூக்ஃபீல்டு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கற்றல் அடைவு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அதையொட்டி, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக கேள்விகள் எழுப்பி துண்டறிக்கை வழங்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் இயக்கத்தினர் கூறியதாவது, மத்திய அரசு 3 ஆண்டுகளாக கட்டாய கல்வி திட்டத்திற்கு நிதியளிக்கவில்லை.தமிழக அரசு தாமதமாக நீதிமன்றத்தை அணுகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.மாணவர்கள் சேர்க்கை தாமதமானது தமிழக அரசின் பொறுப்பு. மத்திய அரசிடம் நிதி கிடைக்கும் வரை காத்திருக்க முடியாதுஎன நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக முதல்வரின் உறுதிமொழி என்ன ஆயிற்று என்றும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் போலீசார் தலையிட்டு அமைப்பினரை நீக்கினர். அதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story

