அஞ்சலக ஊழியர் மீது பேருந்து மோதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்!

அஞ்சலக ஊழியர் மீது பேருந்து மோதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்!
X
கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த பரத் என்பவர், கவுண்டர் மில்ஸ் அஞ்சலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றபோது, தனியார் பேருந்து மோதியதால் அவர் கால் முறிவுடன் படுகாயமடைந்தார்.
கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த பரத் என்பவர், கவுண்டர் மில்ஸ் அஞ்சலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றபோது, தனியார் பேருந்து மோதியதால் அவர் கால் முறிவுடன் படுகாயமடைந்தார். மேட்டுப்பாளையம் சாலையில் இயங்கும் தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விபத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story