கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

X
வேலூர் மாவட்டம் பாலாற்றங்கரையில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பம்பை, மேளம், தாளம் முழங்க, அம்மன் ஊர்வலமாக சாலையில் உள்ள கெங்கையம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கண் திறப்பு நடைபெற்றது. மாதனூர், நெட்டிகுப்பம், காளிகாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

