பிரம்மரிஷி மலை மகான் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சித்தர் சுவாமிகள் குருபூஜை

சித்தர் சமாதியில் அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, 210 மகா சித்தர்கள் யாகபூஜையும் தீபாராதனை
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அடுத்து சமத்துவபுரத்தில் பிரம்மரிஷி மலை மகான் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சித்தர் சுவாமிகள் குருபூஜை விழாவை முன்னிட்டு, சித்தர் சமாதியில் அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, 210 மகா சித்தர்கள் யாகபூஜையும் தீபாராதனை நடைபெற்றன. விழாவில் மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் மாதாஜி ரோகிணி ராஜகுமார், தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், ஓய்வுபெற்ற அறநிலைய துறை இணை ஆணையர் சிவக்குமார், வடலூர் தெய்வ நிலைய அறங்காவலர் குழு உறுப்பினர் கிஷோர்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் சுற்றுவட்டார பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய பின்புறம் உள்ள பிரம்மரிஷி மலை ஸ்ரீலஸ்ரீ காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஆசிரமத்திலும் குருபூஜை விழாவானது பூஜைகளுடன் நிர்வாகி காமராஜ் சுவாமிகள் தலைமையில் சாதுக்களுக்கு வஸ்திரதானமும் , பொது மக்களுக்கு அன்னதானத்துடன் சிறப்பாக நடைபெற்றன.
Next Story