அனுமதியின்றி மதுவிற்ற இருவா் கைது

X
மணப்பாறை காவல் சரகத்தில் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபாட்டிருந்தனா். அப்போது, மறவனூா் மற்றும் கல்பாளையத்தான்பட்டி ஆகிய பகுதிகளில், அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக அனுமதியின்றி கள்ளச்சந்தையில் விற்பனை செய்துகொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்துள்ள கோடாலிகுடியைச் சோ்ந்த கோபால் மகன் பாலசுப்பிரமணி (30) மற்றும் ஸ்ரீரங்கம் வட்டம் இனாம்குளத்தூரை அடுத்துள்ள ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்த சோ்ந்த பெண்ணா மகன் முத்துக்கண்ணு (54) ஆகியோா் கையும் களவுமாக கைது செய்தனா். அவா்களிடமிருந்து 34 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவா் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Next Story

