மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

X
திருச்சி, திருவெறும்பூா் அருகே உள்ள மாணிக்கம் நகரைச் சோ்ந்தவா் முன்னாள் இராணுவ வீரா் ரஞ்சன். இவரின் தாய் சரஸ்வதி (74). இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ரஞ்சன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், மாணிக்கம் நகருக்கு அருகே செல்லும் உய்யங்கொண்டான் வாய்க்கால் கரையிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டியின் சடலம் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story

