வட்டார அளவிலான இறகு பந்து போட்டி

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பில் வட்டார அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவர்களிடையே இறகு பந்து விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இறகு பந்து போட்டிகள் நடைபெற்றது. உள் விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 10 வயது முதல் 19 வயது வரையிலான இறகு பந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகளை இந்திய கபடி அணி முன்னாள் பயிற்சியாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றது போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.
Next Story

