வாங்காத டிராக்டருக்கு தவணை கட்டச் சொல்லி மிரட்டல்

X
வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (58). இவர், சீத்தமரம் நால்ரோட்டில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு தவமணி (52) என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் இருந்து வந்த டிராக்டர் கம்பெனி விற்பனையாளர்கள் அவரிடம் பேசி டிராக்டர் வாங்கி ஓட்டினால் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினர். முருகன் டிராக்டர் வாங்குவதற்காக திண்டுக்கல்லில் உள்ள டிராக்டர் கம்பெனிக்குச் சென்றார். இதையடுத்து அவர்களும் டிராக்டரை காட்டி அதை தவணை முறையில் வாங்க ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஏஜெண்டுகளிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து தனியார் நிதி நிறுவன ஏஜென்ட்களும் தாங்கள் வைத்திருந்த டாக்குமெண்ட்களில் முருகனிடம் கையெழுத்து வாங்கி கொண்டனர். பின்பு ஊருக்கு வந்த முருகன் சில நாட்கள் கழித்து டிராக்டர் கம்பெனிக்குச் சென்று என்னால் டிராக்டரை ஓட்டி சம்பாதித்து தவணை கட்ட முடியாது. எனவே எனக்கு டிராக்டர் வேண்டாம் என கூறிவிட்டு வந்து விட்டார். தான் வாங்காத வாகனத்திற்கு தவணை கட்டச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என்று சக ஆட்டோ ஓட்டுநர்களிடம் முருகன் புலம்பியுள்ளார். அதன் பின்னர் பூச்சி மருந்தை வாங்கி குடித்துவிட்டு ஆட்டோவில் மயங்கி கிடந்தார்.
Next Story

